மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், வாரிசு நடிகராக களம் இறங்கினாலும் கடந்த மூன்று வருடங்களில் இன்னும் ஒரு நல்ல அறிமுகத்தை அவரால் பெறமுடியவில்லை. தமிழில் அவர் அறிமுகப்படமாக நடித்த ஒருபக்க கதை படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்தநிலையில் தான், பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் காளிதாஸ். இதை ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் காளிதாஸ் அறிவித்திருந்தாலும், தற்போது அதை உறுதி செய்யும் விதமாக இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் இந்த படத்திற்கான கதாநாயகி தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார்.
கடந்த ஜனவரியில் மோகன்லால் மகன் பிரணவை வைத்து ஆதி என்கிற நூறு நாள் படத்தை கொடுத்த ஜீத்து ஜோசப் காளிதாஸுக்கும் கைகொடுப்பார் என உறுதியாக நம்பலாம்.