இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
கிரிஷ் இயக்கத்தில் தெலுங்கில் தயாராகி வரும் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்க, வித்யாபாலன் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் என்டிஆருடன் நடித்த பல நடிகர் நடிகைகளின் கதாபாத்திரங்களும் இடம்பெறுகிறது.
அந்த வகையில், அவருடன் சாவித்ரி சில படங்களில் நடித்திருப்பதால் அவரது வேடத்தில் மகாநதியில் நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் சாவித்ரியாக நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க இப்போது ரகுல் பிரீத் சிங் கமிட்டாகியிருக்கிறார்.
மேலும், தயாரிப்பாளர் நாகிரெட்டி வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் இந்த படத்தில் மேலும் சில முக்கிய கதபாத்திரங்களுக்கான நடிகர் நடிகையர் தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.