தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குறிப்பிட்ட வயதைக் கடந்து, வேகமான விளையாட்டுக்கு உடம்பு ஒத்துழைக்கவில்லை என்றால், கிரிக்கெட் வீரர்கள் தாங்களாகவே, விளையாட்டுக்கு ஓய்வு அறிவித்து விடுவார்கள். அந்த பாணியில், தற்போது, நடிகர் ஜீவாவும், இன்னும் ஆறேழு ஆண்டுகளில் நடிப்புக்கு டாடா சொல்லி ஓய்வு அறிவித்துவிடுவேன் என கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியதாவது : இப்பவே, இளம் நாயகிகளுடன் காதல் காட்சிகளில் டூயட் பாடுவதை ரசிகர்கள் ஏற்கவில்லை. சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்து கலாய்க்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகள் கழித்து, நாற்பது வயதைத் தொட்ட பின்னும், இதே டூயட் காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்தால், ரசிகர்கள் கல்லெடுத்துத்தான் அடிப்பார்கள். அந்த நிலை வருவதற்குள், நாமாகவே ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அதனால்தான், ஆறேழு ஆண்டுகளில் நடிப்புக்கு ஓய்வு அறிவிப்பது நடக்கும்.
இவ்வாறு ஜீவா கூறியுள்ளார்.
ஜீவா, இப்படி சொல்லியிருப்பது, நாற்பதைக் கடந்தும் டூயட் பாடிக் கொண்டிருக்கும் தமிழ் நடிகர்கள் பலருக்கும் கோபத்தைக் கிளறி இருக்கிறது.