ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த படம் 'வேலையில்லா பட்டதாரி 2'. அந்தப் படம் வெளிவந்து 11 மாதங்கள் ஆகிவிட்டது. தனுஷின் அடுத்த வெளியீடான 'வட சென்னை' செப்டம்பர் மாதம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இன்னும் தேதிதான் உறுதி செய்யப்படவில்லை.
ஜுலை 28ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. டீசரைப் பார்த்த சிலர் இதுவரையில் இல்லாத ஒரு வித்தியாசமான படமாக இந்தப்படம் இருக்கும் என்று தகவலை கசிய விட்டுள்ளார்கள்.
'வட சென்னை' படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் எந்தப் படம் வெளியாகும் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பாலாஜி மோகன் இயக்கி வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கௌதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பும் நடந்து வருகின்றன.
'வட சென்னை' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. படம் வந்து வெற்றி பெற்றுவிட்டால், அதற்கடுத்து வெளிவர உள்ள படத்திற்கும் வியாபாரம் அதிகமாக இருக்கும். 'மாரி 2' படம் தனுஷின் சொந்தத் தயாரிப்பு, 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ், ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறார்கள். தனுஷ், அவருடைய சொந்தத் தயாரிப்பையே 'வட சென்னை' படத்திற்கு அடுத்து வெளிவர வைப்பாரா, அல்லது நண்பர்கள் தயாரித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை வெளிவர வைப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.