டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் வசூலில் சாதனை படைத்த படம். அது மறுவெளியீடாக வெளிவந்தும் வசூலை குவித்தது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகத்தை கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற பெயரில் தயாரிக்க விரும்பினார் எம்.ஜி.ஆர். ஆனால் அதற்கு பிறகு அவர் அரசியலில் பிசியாகிவிட்டதால் அந்த முயற்சி கைகூடவில்லை.
தற்போது வேல்ஸ் பல்கலைகழக வேந்தரும், எம்.ஜி.ஆரின் நண்பர் ஐசரி வேலனின் மகனுமான ஐசரி கணேஷ் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை அனிமேஷனில் உருவாக்கி வருகிறார். பெரிய பட்ஜெட்டில் படம் உருவாகி வருகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா வேல்ஸ் பல்கலை கழகத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் நடந்தது. ஏ.சி.சண்முகம், சைதை துரைசாமி இணைந்து வெளியிட நடிகர் பிரபுதேவா பெற்றுக் கொண்டார்.