வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கடந்த 2012ல் மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் வெளியான படம் தன 'ஹவ் ஓல்டு ஆர் யூ'. பல வருடங்கள் கழித்து அதில் நடித்திருந்த மஞ்சு வாரியருக்கு ஒரு சரியான ரீ என்ட்ரி அமைத்து தந்த படம் இது. அதேப்போல தமிழிலும் இந்தப்படம் '36 வயதினிலே' என ரீமேக்காகி ஜோதிகாவின் ரீ-என்ட்ரியையும் வெற்றியாக்கியது.
எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய கதை என்பதால் அப்போதிருந்தே இந்தப்படம் எப்போது இந்தப்படம் இந்தியிலும் ரீமேக் ஆக இருப்பதாக சொல்லப்பட்டது. தமிழில் இந்தப்படம் வெளியானபோதே மற்ற மொழிகளில் இந்தப்படத்தை ரீமேக் செய்ய பலபேர் போட்டி போட்டனர். தற்போது ரோஷன் ஆண்ட்ரூஸ் நிவின்பாலி, மோகன்லாலை வைத்து தான் இயக்கி வரும் காயம்குளம் கொச்சுன்னி படத்தை முடிந்துவிட்டார்.
இதனால் அடுத்ததாக ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குவார் என்றும், அதில் வித்யாபாலன் கதாநாயகியாக நடிப்பார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் ஒரு ஒரு டிவி பேட்டியில் இதற்கு பதிலளித்த ரோஷன் ஆண்ட்ரூஸ் தற்போதைக்கு இதன் இந்தி ரீமேக்கை இயக்கும் எண்ணம் இல்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.