'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை கங்கனா ரணாவத் தற்போது, ஜான்சிராணி லட்சுமிபாய் கதையில் உருவாகி வரும் மணிகர்னிகா படத்தில் நடிக்கிறார். படத்தில் ஜான்சிராணியாக அவர் நடிக்கிறார். சரித்திர படமாக உருவாகும் இந்தப்படத்திற்காக பலவித போர் பயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். தமிழில் வானம் படத்தை எடுத்த கிரிஷ் இயக்குகிறார்.
இப்படம் முதலில் ஏப்ரலில் ரிலீஸாகும் என்றார்கள், படப்பிடிப்பு முடியாததால் ஆகஸ்ட்டில் ரிலீஸாகும் என்றார்கள். ஆனால் இன்னும் சில காட்சிகள் படமாக்க வேண்டியிருக்கிறதாம். இதனால் படத்தை நவ., 29-ல் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
ஆனால் அன்றையதினமும் படம் ரிலீஸாகாது என்கிறார்கள். காரணம் அன்றைய தினம் ரஜினி, அக்ஷ்ய் குமார் நடித்த 2.0 வெளியாக இருப்பதால் போட்டியை தவிர்க்க படம் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.