பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன். கனடாவைச் சேர்ந்த இவர் இந்திய வம்சாவளி பெண். இவரது பூர்வீகம் பஞ்சாப். சன்னி லியோனின் இயற்பெயர் கரன்ஜித் கவுர். இந்த பெயரை அவர் பயன்படுத்துவதில்லை.
தற்போது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றை தொடராக தயாரித்து வருகிறார்கள். அது யூ டியூப் சேனலில் இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. சன்னி லியோன் பிறப்பு, கல்லூரி வாழ்க்கை, ஆபாச பட நடிகை ஆனது, இந்தியாவுக்கு வந்தது, இங்கு நடிகையானது என தொடர்ச்சியாக அவரது வாழ்க்கை படமாகிறது. இந்தப் படத்திற்கு கரன்ஜித் கவுர் தி அன்டோல்ட் ஸ்டோரி என்று டைட்டில் வைத்துள்ளார்கள். இந்த டைட்டிலுக்கு சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம் கவுர் என்பது சீக்கிய பெண்கள் வைத்துக் கொள்ளும் பெயர்.
இதுகுறித்து சீக்கிய அமைப்பின் நிர்வாகி தில்ஜித் சிங் பேடி கூறியிருப்பதாவது: கவுர் என்பது சீக்கிய குருவால் சீக்கிய பெண்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையான பெயர். சீக்கிய போதனைகளை பின்பற்றாதவர்கள் யாரும் இந்த பெயரை பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம். மீறி பயன்படுத்தினால் சீக்கிய மத உணர்வுகளை புண்படுத்துவதாக ஆகும். எனவே சன்னிலியோன், கவுர் பெயரை பயன்படுத்தக்கூடாது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். என்று கூறியுள்ளார்.