ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்ரீ குரு சினிமாஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் வி.சி.திம்மரெட்டி தயாரித்து உள்ள படம் சந்தோஷத்தில் கலவரம். கிராந்தி பிரசாத் இயக்கி உள்ளார், சிவரங் இசை அமைத்துள்ளார். இதில் கவுதமி, சுஜன்யா, ஷிவானி, அபிக்ஷா என்ற நான்கு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் 4 பேரும் சம்பளம் எதுவும் வாங்காமல் இலவசமாக நடித்துக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து படத்தின் இயக்குனர் கிராந்தி பிரசாத் கூறியதாவது:
நண்பர்கள் சுற்றுலா பயணம் செல்கிறார்கள். அப்படி போகும்போது ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்து வருகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன். இதில் நான்கு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். அதேபோல நிரந்த், ராகுல் கல்யாண், ஆர்யன், ருத்ர ஆரா என நான்கு ஹீரோக்களும் அறிமுகமாகிறார்கள். இவர்கள் யாருமே ஒரு காசுகூட சம்பளமாக வாங்கவில்லை. தங்களிடம் உள்ள திறமையை நிரூபிக்க இலவசமாக நடித்துக் கொடுத்தார்கள். என்றார்.