ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரைப்படங்கள் ரிலீசான அன்றே தியேட்டர்களில் திருட்டுத்தனமாக கேமரா வைத்து எடுக்கப்பட்டு, இண்டர்நெட்டில் ஏற்றி திருட்டுத்தனமாகப் பார்ப்பதற்கும், டவுன்லோடு செய்து திருட்டு டிவிடி தயாரித்து எல்லா இடங்களுக்கும் விநியோகித்து தமிழ் சினிமாவின் வியாபாரத்தைப் பெருமளவில் நஷ்டப்படுத்திக் கொண்டிருப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில் மனுசனா நீ படம் திருடப்பட்டதும், மயிலாடுதுறை கோமதி தியேட்டர், கரூர் எல்லோரா தியேட்டர் ஆகிய இரண்டு தியேட்டர்களில் ஒரு குப்பைக் கதை திருடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மனுசனா நீ படத்தின் தயாரிப்பாளர் கஸாலியும், ஒரு குப்பைக் கதை படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அஸ்லமும் தியேட்டர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, தக்க நஷ்டஈடு கிடைக்கவும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டு தியேட்டர்களிலிருந்து திருட்டு நடக்காமலிருப்பதற்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜை சந்தித்து மனு கொடுத்தனர். மனுக்களைப் பெற்று விபரங்களைக் கேட்டறிந்த அமைச்சர் தக்க நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு பெற்றுத் தரவும், உறுதியான நடவடிக்கை எடுத்து பைரஸியை ஒழிக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.