வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விஜய் சேதுபதியும், அருண்பாண்டியனும் இணைந்து தயாரிக்க, கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள படம் 'ஜுங்கா'. இப்படம் அண்மையில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. 'ஜுங்கா' படத்துக்கு 'U' சான்று வழங்கப்பட்டது.
அதையடுத்து இம்மாதம் 27-ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். சுமார் 350 தியேட்டர்களில் ஜுங்கா படத்தை வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கினர்.
இந்நிலையில் 'ஜுங்கா' ரிலீஸாகும் அதே நாளில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள 'கஜினிகாந்த்' படமும் வெளியாகவிருக்கிறது. ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற ஆபாசமான படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் அடல்ட் கண்டன்ட் படம் இல்லை. ஆர்யாவுக்கு தற்போது மார்க்கெட் குறைவு தான். அதன் காரணமாகவோ என்னவோ கஜினிகாந்த் படம் ஜூங்காவை விட குறைவான தியேட்டர்களிலேயே ரிலீஸாகிறது.