ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் பிரபலமான நடிகராக விளங்கும் அனூப் மேனன் அடிப்படையில் ஒரு கதாசிரியரும் கூட. பல ஹிட் படங்களுக்கு கதை எழுதியுள்ள அனூப் மேனன், 2011 இல் பியூட்டிபுல் என்கிற படத்திற்கு கதை எழுதியிருந்தார். அந்த படம் அப்போது மிக பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அப்போதெல்லாம் விட்டுவிட்டு, அந்த படம் ஹாலிவுட்டில் வெளியாகியுள்ள தி இன்டச்சபிள்ஸ் என்கிற படத்தின் தழுவல் என சிலர் அனூப் மேனனை கிண்டலடித்து வருகிறார்கள்
இது பற்றி அனூப் மேனனிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது, அப்போது வித்தியாசமான முறையில் அதே சமயம் லாஜிக்காக பதிலளித்தார் அனூப் மேனன். இது பற்றி அவர் கூறும்போது, தி இன்டச்சபிள்ஸ் படமும் நான் கதை எழுதிய பியூட்டிபுல் படமும் ஒரே வருடத்தில் மூன்று மாத இடைவெளியில் வெளியாகின இன்னும் சொல்ல போனால் இன்டச்சபிள்ஸ் படம் வெளியான சமயத்தில் பியூட்டிபுல் படம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷனில் இருந்தது.
இந்த நிலையில் அந்த படத்தை எப்படி நான் காபி அடித்திருக்க முடியும் என லாஜிக்காக யோசிக்க வேண்டாமா, ஒருவேளை அப்படியே நான் காபி அடித்ததாக இருந்திருந்தால் சென்று இன்டச்சபிள்ஸ் படத்தின் இயக்குனர் வீட்டிற்கே சென்று அவர் கதையை திருடி தான் படமாக்கி இருக்க வேண்டும். இது சாத்தியமா சொல்லுங்கள் என பதில் கேள்வி கேட்டு எதிர்ப்பாளர்களை மடக்கியுள்ளார் அனூப் மேனன்.