ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் |
ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நயன்தாரா மீண்டும் மலையாளத்தில் 'லவ் ஆக்சன் டிராமா' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். நிவின்பாலி ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தை மலையாள இளம் முன்னணி இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் இயக்குகிறார். நடிகரான இவர், தற்போது இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறுகிறார்.
ஏப்ரல் மாதம் துவங்குவதாக இருந்த இந்தப்படம் நிவின்பாலிக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது துவங்க இருக்கிறது. படப்பிடிப்பு இன்னும் துவங்காத நிலையிலேயே இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு இப்போதே கைப்பற்றியுள்ளது பிரபல ஆசியாநெட் சேனல்.
இந்தப்படத்தின் தொண்ணூறு சதவீத படப்பிடிப்பு சென்னையில் தான் நடைபெறவுள்ளதாம். மீதி காட்சிகள் மட்டும் கேரளாவில் படமாகின்றதாம். நிவின் - தயன் - வினீத் சீனிவாசன் கூட்டணியில் எப்போதுமே முக்கியமான ஆளாக கருதப்படும் அஜூ வர்கீஸ், இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.