மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கு சினிமாவை சுழற்றி அடித்த ஸ்ரீரெட்டி எனும் புயல், தற்போது தமிழ் சினிமாவில் மையம் கொண்டுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பட்டியலிட்டு வருகிறார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து லாரன்ஸ் பெயரை வெளியிட்டுள்ளார்.
இதுப்பற்றி பேஸ்புக்கில் ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது... நண்பர்கள் மூலம் கோல்கொண்டா ஹோட்டலில் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். அவரது அறைக்கு கூட்டி சென்றார். உள்ளே ராகவேந்தர் படம், ருத்ராட்ச மாலைகள் இருந்தன. அதைப்பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சினிமாவில் முன்னேறியது, ஏழை குழந்தைகளுக்கு உதவுவது, புதியவர்களுக்கு வாய்ப்பு தருவது போன்ற விஷயங்களை அவர் சொன்னபோது ஆச்சர்யப்பட்டேன்.
அதன்பின்னர் தான் லாரன்ஸின் உண்மையான முகம் தெரிந்தது. எனது இடுப்பு மற்றும் உடலின் சில பாகங்களை காண்பிக்க சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமான்ட்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார். பின்னர்..... உனக்கு பட வாய்ப்பு நிச்சயம் என்றார். அதை நம்பி அவருடன் சில நாட்கள் பழகினேன். ஆனால் சொன்னபடி அவர் நடக்கவில்லை.
இவ்வாறு கூறியிருக்கிறார்.