கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் வெளிவந்த காதல் படங்களில் 8 வருடங்களுக்கு முன்பு வந்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திற்குப் பிறகு வேறு எந்த காதல் படமும் ரசிகர்களை உருக வைக்கவில்லை. சில காதல் படங்கள் வந்தாலும் அவை முழுமையான காதல் படங்களாக அமையவில்லை. அந்தக் குறையை '96' படம் போக்கிவிடுமோ என்ற ஒரு எதிர்பார்ப்பு நேற்று வெளியான படத்தின் டீசரைப் பார்த்ததும் தோன்றகிறது.
“பசங்க, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, எய்தவன்' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பிரேம்குமார் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ரம்மி'. விஜய் சேதுபதி, த்ரிஷா நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். நேற்றைய டீசரில் இருவரது நடிப்பையும் பார்த்து வியந்து போயிருக்கிறது ரசிகர் கூட்டம்.
ஒவ்வொரு படத்திலும், வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி இந்தப் படத்திலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். 16 வருடங்களுக்கு முன்பு 'மௌனம் பேசியதே' படத்தில் பார்த்தது போன்றே இருக்கும் த்ரிஷா. காட்சிகளுடன் இரண்டறக் கலந்து வரும் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை, இயல்பான வெளிச்சத்தில் உள்ள ஒளிப்பதிவு என '96', அந்த வயதுடையவர்களையும் இந்தக் காதலால் கட்டிப் போட வைக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
யு டியூப்பில் வெளியான 24 மணி நேரத்திற்குள் 12 லட்சம் பார்வைகளைக் கடந்தும், டிரென்டிங்கில் முதலிடத்திலும் இருக்கிறது.