‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மோகன்லால் தற்போது நடித்து வரும் நான்கு படங்களில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது ஒடியன் படம். கிட்டத்தட்ட புலிமுருகன் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கப்படும் இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஸ்ரீ குமார் மேனன் இயக்கியுள்ளார்.
மஞ்சுவாரியார் கதாநாயகியாக நடிக்க, வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் ஒடியன் மாணிக்கம் என்கிற பிளாக் மேஜிஷியனாக நடித்துள்ளார் மோகன்லால். கிட்டத்தட்ட ஒடியனின் குழந்தை பருவம் முதல் 60 வயது வரை உள்ள காலகட்டத்தை இந்த கதை பிரதிபலிக்கிறதாம்.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்டாலும், மோகன்லால் அவரது மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் அவருடைய டப்பிங் மட்டும் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில், தன்னுடைய போர்ஷனுக்கு டப்பிங் பேசி வருகிறார் மோகன்லால். இந்த படம் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.