டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சீனியராகி இனி பட வாய்ப்புகளே வராதது என்கிற நிலையில் திருமணம் செய்துகொள்ளும் நடிகைகள் பட்டியலில் கடந்த வருடம் நடிகை பிரியாமணியும் இடம்பிடித்தார். கடந்த வருடம் பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜூவுக்கும் பெங்களூருவில் திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து தமிழ் திரையுலகம் அவருக்கு சுத்தமாகவே குட்பை சொல்லிவிட்டது.
ஆனால் கன்னட சினிமா அவரை கைவிடுவதாக இல்லை. தற்போது கன்னடத்தில் மூன்று படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்தநிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீசையுடன் காட்சியளிக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டு பழைய ஞாபகங்களை பகிர்ந்துள்ளார் பிரியாமணி. 2016ல் தனா கயோனு என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தபோது எடுத்த இந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.