ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா என பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விஜய் வெளிநாட்டில் உள்ள ஐடி பீல்டில் பணியாற்றும் வேடத்தில் நடிக்கிறார். படத்தில் கூகுளின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை தான் விஜய்யின் ரோல் மாடலாம். அவரைப்போன்று தானும் உலக அளவில் பேசப்படும் ஒரு நபராக வேண்டும் என்று அவரை தனது வழிகாட்டியாகக் கொண்டு செயல்படுவாராம் விஜய்.
ஆனால், இந்தியா வரும் அவர், இங்குள்ள விவசாயிகள் படும் கஷ்டத்தைப்பார்த்து தனது ஆசைகள் கனவுகளை தள்ளி வைத்து விட்டு ஏழைகளின் வாழ்வாதாரத்திற்காக இறங்கி போராடுகிற மாதிரியான கதை என்கிறார்கள்.