தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் சேதுபதி நடித்து, தயாரிக்கும் படம் ஜூங்கா. அவரது நண்பர் கோகுல் இயக்கி உள்ளார். இதற்குதானே ஆசைப்பட்டாய், காஷ்மோரா படங்களை இயக்கியவர் இவர். ஜூங்கா பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட வேண்டிய கதை என்பதால் தயாரிப்பாளர் கிடைக்காமல் தவித்த கோகுலுக்கு ஆறுதல் சொல்லி தானே தயாரிப்பாளர் ஆனார் விஜய் சேதுபதி. இதில் சாயிஷா, மடான செபாஸ்டின், சரண்யா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் தயாரிப்பில் இருந்தபோது படத்தை பற்றி கேள்விப்பட்டு தயாரிப்பில் தானும் இணைந்து கொண்டார் நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன். இதுகுறித்து அருண் பாண்டியன் கூறியதாவது:
படத் தயாரிப்பில் கிடைத்த சில கசப்பான அனுபவங்களால் இனி படமே தயாரிக்க வேண்டாம். தொழிலை மட்டும் பார்ப்போம் என்று இருந்தேன். ஆனால் என்னை மீண்டும் தயாரிப்பாளராகவிட்டது இந்தப் படம். பட்ஜெட் பெருசுதான் அதனால் சின்ன தயக்கம் இருந்தது. அதற்கு விஜய்சேதுபதி நீங்க தைரியமாக பண்ணுங்க. இந்த படத்தால உங்களுக்கு நஷ்டம் வந்தால் அதை நான் திருப்பி தருகிறேன். என்றார். அந்த நல்ல மனதுக்காகவே கதை கேட்காமல் இந்த படத்துக்கு தயாரிப்பாளராக வந்தேன். சமீபத்தில்தான் படத்தை பார்த்தேன். எனது அனுபவத்தில் சொல்கிறேன். இது 100 சதவிகிதம் வெற்றிப் படமாக இருக்கும், வசூலில் சாதனை படைக்கும். என்றார். படத்தின் பட்ஜெட் 30 கோடி என்கிறார்கள்.