ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மகேஷ்பாபுவுடன் நடித்த ஸ்பைடர் படத்தின் தோல்வி காரணமாக அதையடுத்து தெலுங்கில் படவாய்ப்பு இல்லாமல் இருந்த ரகுல் பிரீத் சிங், சமீபத்தில் நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் கமிட்டானார். இந்த நிலையில், தற்போது என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்திலும் அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த படத்தில் என்டிஆரின் சினிமா உலக காட்சிகளும் நிறைய இடம்பெறுகிறது. அதனால் அவருடன் நடித்த சாவித்ரி, ஜமுனா, கிருஷ்ணவேணி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, வாணிஸ்ரீ, ஜெயசுதா என பல நடிகைகளின் கதாபாத்திரங்களும் இடம்பெறுகிறது.
அந்த வகையில், என்டிஆரின் மனைவி வேடத்தில் வித்யாபாலன் நடிக்கும் நிலையில், தற்போது ரகுல் பிரீத் சிங்கும் ஒரு கேரக்டருக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனால் இவர் எந்த சீனியர் நடிகையின் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்கிற விவரம் வெளியாகவில்லை.