'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா என இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்க, 2012-ம் ஆண்டு வெளியான படம் 'வேட்டை'. மாதவனுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியும், ஆர்யாவுக்கு ஜோடியாக அமலா பாலும் நடித்த இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்தன.
சுமாரான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் 2013-ம் ஆண்டு தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. பின்னர், பெங்காலி மொழியில் 2014-ம் ஆண்டும் ரீமேக் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒடிய மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில், 'வேட்டை' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இப்படத்தின் இந்தி உரிமையை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா பெற்றுள்ளார். லிங்குசாமி இயக்கிய படங்களிலேயே அதிக மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படம் என்ற பெருமையை வேட்டை படம் பெற்றுள்ளது.