பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். 15க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களை தயாரித்துவிட்டு தமிழுக்கு வந்தார். பவித்ரன் இயக்கிய வசந்தகால பறவை படத்தை முதலில் தயாரித்தார். அந்த படம் வெற்றி பெற்றதும். அதே பவித்ரனை வைத்து சூரியன் படத்தை தயாரித்தார். சரத்குமாருக்கு ஹீரோவாக திருப்பு முனையையும், பிரபுதேவாவுக்கு அறிமுகத்தையும் தந்த படம். அதன் பிறகு கதிர் இயக்கிய சிந்துநதி பூ தயாரித்தார் அதுவும் வெற்றி பெற்றது.
ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்தை பிரமாண்டமாக தயாரித்தார். அன்று முதல் ஷங்கருக்கு பிரமாண்ட இயக்குனர் என்றும் குஞ்சுமோனுக்கு பிரமாண்ட தயாரிப்பாளர் என்றும் பெயர் வந்தது. அதன் பிறகு மீண்டும் ஷங்கருடன் இணைந்து காதலன் படத்தை தயாரித்தார். இந்த படம்தான் பிரபுதேவாவை கமர்ஷியல் ஹீரோவாக்கியது.
தொடர்ந்து வேகமான வளர்ச்சி, வெற்றி என வந்து கொண்டிருந்தவரை ரட்சகன் என்ற படம் தடுத்து நிறுத்தியது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, உலக அழகி சுஷ்மிதா சென் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தோல்வி அடைந்தது. இதனால் கோடிக் கணக்கில் நஷ்டம் அடைந்தார். அதன் பிறகு தயாரித்த சில படங்களும் அவருக்கு பலன் தரவில்லை. இதனால் சினிமா தயாரிப்பிலிருந்து விலகினார். அவரது சூப்பர் ஹிட் படமான ஜென்டில்மேன் வெளியாகி இது 25வது ஆண்டு. இதையொட்டி அவரது நண்பர்கள் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டு அவரை கவுரவப்படுத்தியிருக்கிறார்கள்.