பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் திடீரென அரசியல் படங்கள் டிரென்ட் உருவாகி உள்ளன. பல வருடங்களாகவே அரசியல் படங்கள் வருவது குறைந்திருந்தது. பல படங்களில் ஒரு சில வசனங்கள் மட்டும்தான் அரசியல் என்ற நிலையில்தான் திரைப்படங்களில் அரசியல் இருந்தது.
ஆனால், தற்போது உருவாகி வரும் படங்களில் அரசியல் தான் மையம் என்பது போல அந்தப் படங்களைப் பற்றிய தகவல்களும், போஸ்டர்களும், பெயர்களும் தெரியப்படுத்துகின்றன.
மணிரத்னம் இயக்கி வரும் 'செக்கச் சிவந்த வானம்' படம் தொழிலாளர்களை மையப்படுத்திய அரசியல் படமாக உருவாகி வருகிறது என்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'சர்கார்' படத்தின் கதை முற்றிலும் தற்கால அரசியல் நிகழ்வு என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'என்ஜிகே' படமும் ஒரு அரசியல் படம்தான் என்று அந்தப் படத்தின் போஸ்டர்களும், புகைப்படங்களும் உணர்த்தின. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்தின் முதல் பார்வையும், பெயரும் இது அரசியல் படம்தான் என்று புரிய வைத்துள்ளன.
இந்த வரிசையில் அடுத்து யார் சினிமா அரசியலில் இறங்கப் போகிறார்களோ....?.