பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ரஜினி நடித்த அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தை தயாரித்தது தொடர்பாக மீடியா ஒன் குளோபல் நிறுவனத்திற்கு ஆட்பீரோ என்ற நிறுவனம் கடன் அளித்திருந்தது.
இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்தார். கடனை திருப்பிச் செலுத்தாதால் ஆட்பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு, இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
ஜூலை 10-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் ரூ.6.23 கோடி பணத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் எச்சரித்தது. இந்த வழக்கு இன்று(ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. லதா ரஜினிகாந்த் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
இந்த விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யவும் சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை லதா ரஜினிகாந்த் எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.