ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
தெலுங்கில் தற்போது ஹலோ குரு பிரேம கோஸம் என்ற படத்தில் ராமிற்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் அனுபமாவின் அப்பா வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜ்க்கும், அனுபமாவுக்கும் படப்பிடிப்பு தளத்தில் கடும் மோதல் ஏற்பட்டதாகவும், அதையடுத்து அவர்களை டைரக்டர் செட்டில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் டோலிவுட்டில் பரபரப்பு செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது பிரகாஷ்ராஜூடன் தான் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அனுபமா பரமேஸ்வரன் அந்த செய்தியை மறுத்துள்ளார். யாரோ திட்டமிட்டு இப்படியொரு வதந்தியை பரப்பி விட்டதாக தெரிவித்துள்ள அவர், பிரகாஷ்ராஜ் எனது தந்தை போன்றவர். அவருடன் நான் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளியான செய்தியைக்கேட்டு காமெடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.