பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மாடலிங் மேன் ஆரவும், நடிகை ஓவியாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது ஓவியா ஆரவை காதலிப்பதாக நிகழ்ச்சியில் பகிரங்கமாக சொன்னார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் "காதலிக்கவில்லை ஆனால் நாங்கள் நல்ல நண்பர்கள்" என்று சொன்னார். என்றாலும் இருவரும் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே நெருக்கமாக இருக்கும் படங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று ஆரவும், ஓவியாவும் பேங்காக் கடை வீதியில் ஜாலியாக ஊர்சுற்றும் படம் ஒன்று வைரலாக பரவியது. ரசிகர் ஒருவர் அவர்களுக்கு தெரியாமல் எடுத்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டார். இதனால் இருவரும் காதலிப்பது உறுதி என மீண்டும் செய்திகள் பறந்தது.
ஆனால் இதனை ஆரவ் மறுத்துள்ளார். "அந்த படம் உண்மைதான். ஆனால் அது பழைய படம். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் நான், ஓவியா மற்றும் சில நண்பர்கள் பேங்காக்கிற்கு சுற்றுலா சென்றோம். அப்போது யாரோ எடுத்த படம் அது. எங்கள் பக்கத்தில் எங்கள் நண்பர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். அது அந்த படத்தில் இல்லை. இப்போதும் நாங்கள் நல்ல நண்பர்கள்தான். காதலர்கள் இல்லை" என்கிறார் ஆரவ்.