தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பி.உன்னிகிருஷ்ணன் அடுத்ததாக திலீப்பை வைத்து படம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. நடிகர் சங்கம் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட மோகன்லால் நடிகை வழக்கு விவகாரத்தில் தற்போது திலீப்பிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மோகன்லாலில் ஆஸ்தான இயக்குனரான பி. உன்னிகிருஷ்ணன் என்பவர் திலீப் படத்தை இயக்குவதாக வெளியான செய்தியும் இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
ஆனால் அப்படி வெளியான செய்தியில் உண்மையில்லை. திலீப் படத்தை தான் இயக்கவில்லை என்று கூறியுள்ளார் இயக்குனர் பி. உன்னிகிருஷ்ணன். மேலும் இதை பற்றி அவர் கூறும் போது திலீப் படத்தை இயக்குவதாக இருந்தது ஒரு வகையில் உண்மை தான் ஆனால் அது இப்போது அல்ல கடந்த 2013 ல் அப்போது எனக்கும் திலீப்புக்கும் சேர்த்து தயாரிப்பாளர் ஒருவர் அட்வான்ஸ் தொகை கொடுத்தார் ஆனால் அதன் பின் வந்த நாட்களில் திலீப் வேறு படத்தில் பிஸியாகிவிட அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
அதன்பின் நான் மோகன்லாலை வைத்து படம் இயக்குவதில் பிஸியாகி விட்டேன் அதன்பிறகு இப்போதுவரை திலீப் படத்தை இயக்குவதற்கான எந்த முகாந்திரமும் புதிதாக ஏற்படவில்லை. மேலும் அடுத்தததாக நான் மோகன்லால் படத்தை தான் இயக்கவுள்ளேன் இப்படியிருக்கையில் நான் திலீப் படத்தை இயக்குவதாக தேவையில்லாமல் ஏன் செய்திகள் பரவுகின்றன என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார் உன்னிகிருஷ்ணன்