Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பார்வதி படத்திற்கு போஸ்டர் ஒட்டிய பெண்கள் அமைப்பினர்

08 ஜூலை, 2018 - 10:45 IST
எழுத்தின் அளவு:
women-club-members-in-parvathy-movie-promotion

பிருத்விராஜ்- பார்வதி நடிப்பில் இந்த வாரம் மை ஸ்டோரி என்கிற படம் வெளியாகியுள்ளது இந்த படத்தை அறிமுக பெண் இயக்குனரான ரோஷினி தினகர் என்பவர் இயக்கியுள்ளார் இந்தநிலையில் இந்த படத்திற்கு பார்வதி மூலமாக எதிர்பாராத சிக்கல் ஒன்று கிளம்பியுள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்களை இழிவுபடுத்துகிறார் என நடிகர் மம்முட்டியை விமர்சித்தார் பார்வதி.

அதை தொடர்ந்து அப்போது வெளியான மை ஸ்டோரி படத்தின் பாடல் வீடியோ, ஒன்றரை லட்சம் மம்முட்டியின் ரசிகர்களால் டிஸ்லைக் செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப்படம் வெளியாகும்போது இந்த படத்தை புறக்கணிப்போம் என்று அப்போதே அவர்கள் சபதமும் செய்திருந்தார்கள் இப்போது அந்த படம் வெளியாகி உள்ள நிலையில் தேவையில்லாமல் படத்தை ஓடவிடாமல் தடுப்பதற்காக ஏதேனும் நிகழ்வுகள் அரங்கேற கூடுமோ என்கிற அச்சம் பார்வதி தரப்பில் ஏற்பட்டுள்ளது.



அதனால் இந்தப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பார்வதி உறுப்பினராக உள்ள சினிமா பெண்கள் நல அமைப்பு மை ஸ்டோரி படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. இதற்காக ஆன்லைனில் ப்ரோமோஷன் செய்து வருவதுடன், மேலும் படம் ஓடும் தியேட்டர்களுக்கே சென்று படத்தை விளம்பரபடுத்துவதும் அங்கங்கே படத்தின் போஸ்டர் ஒட்டுவதும் என ரசிகர்களுக்கு இணையாக வேலை பார்த்து வருகிறார்கள் இந்த சினிமா பெண்கள் நல அமைப்பினர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in