ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'விவேகம்' படத்தை தொடர்ந்து 'சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரிப்பில் அஜித் இரண்டாவது முறையாக நடித்து வரும் படம் 'விஸ்வாசம்'. அஜித் நடிப்பில் சிவா இயக்கும் நான்காவது படமான இப்படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு, இப்போது ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் நடந்து வருகிறது.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகி பாபு, தம்பி ரமையா, ரோபோ சங்கர் ஆகியோர் காமெடியன்களாக நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தப்படத்தில் அஜித்துடன் 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அனைகாவும் இணைந்துள்ளார். என்னை அறிந்தால் படத்தில் அனைகா, அஜித்தின் மகளாக நடித்திருந்தார். விஸ்வாசம் படத்திலோ நயன்தாராவின் மகளாக நடிக்கிறார்.
நயன்தாராவின் மகள் என்றால் அஜித்துக்கும் மகள் இல்லையா? அதுதான் இல்லை. நயன்தாராவின் கேரக்டரில் இப்படி ஒரு சஸ்பென்ஸ் இருப்பதாக சொல்லப்படுகிறது.