Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா படத்தில் இணைந்த கலையரசன்

07 ஜூலை, 2018 - 18:47 IST
எழுத்தின் அளவு:
Kalaiyarasan-joints-in-Nayanthara-film

சர்ச்சைக்குரிய 'லக்ஷ்மி' குறும்படத்தை இயக்கிய சர்ஜுன், இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தை விரைவில் வெளியிடுகிறார் தனஞ்செயன். இதற்கிடையில் நயன்தாரா நடிக்கும் படம் ஒன்றையும் இயக்குகிறார் சர்ஜுன்.

இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 18 நாட்கள் நடைபெற்று முடிந்து விட்டது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது. 22 நாட்கள் படப்படிப்பு நடத்தி படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர்.

இந்த படத்தில் கலையரசனும் தற்போது இணைந்துள்ளார். ஆனால் நயன்தாராவுக்கு ஜோடி இல்லை. நயன்தாராவுக்கு இப்படத்திலும் வித்தியாசமான கேரக்டராம். நயன்தாரா ஏற்றுள்ள கேரக்டரைச் சுற்றி நான்கைந்து முக்கிய கேரக்டர்கள் உண்டாம்! அதில் ஒரு கேரக்டரில் தான் கலையரசன் நடிக்க இருக்கிறார்.

மெட்ராஸ் படம் தொடங்கி சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிக்க துவங்கி, அதே கண்கள் உட்பட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் கலையரசன். நயன்தாராவுடன் அவர் நடிக்கும் முதல் படம் இது. இந்த படத்தில் நடிப்பதற்கு கலையரசன் ஒப்புக் கொள்ள காரணம், இயக்குனர் சர்ஜுன் தனக்கு சொல்லப்பட்ட அந்த கேரக்டரின் முக்கியத்துவத்தை உணர்ந்து தானாம்!

ஆகஸ்டில் துவங்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி அனைத்து படப்பிடிப்பு வேலைகளையும் செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் சர்ஜுன்.

Advertisement
பாண்டிராஜ் செய்த சாதனைபாண்டிராஜ் செய்த சாதனை ரஜினி படத்தில் ஜோக்கர் ஹீரோ ரஜினி படத்தில் ஜோக்கர் ஹீரோ


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in