Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினி விளக்கம்

07 ஜூலை, 2018 - 13:23 IST
எழுத்தின் அளவு:
Latha-Rajini-explain-about-Kochadaiyaan-issue

ரஜினி நடித்த கோச்சடையான் படத்திற்காக ஆட்பீரோ என்ற நிறுவனத்திடம் படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் நிறுவனம் கடன் வாங்கியது. இந்த கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்திட்டுள்ளார். கடனை திருப்பிச் செலுத்தாதால் பணம் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.


பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் குளோபல் நிறுவனம் பணத்தை திருப்பிக் கொடுக்காத பட்சத்தில் உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்த் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கோர்ட் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக சமீபத்திலும் கோர்ட் லதா ரஜினிக்கு பணத்தை திருப்பி செலுத்த காலக் கெடு விதித்தது. இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:


சில அச்சு ஊடகங்கள் மற்றும் இனைய செய்தி தளங்களில் கடந்த ஜூலை 3ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் கோகாய் மற்றும் பானுமதி அவர்கள் அடங்கிய பெஞ்சில் நடைபெற்ற வழக்கின் விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆட்பீரோ அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட் சார்பில் லதா ரஜினிகாந்த் அவர்களை எதிர்மனுதாரர் ஆகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட விடுமுறைக் கால சிறப்பு மனு மீதான விசாரணை அது.

வாதங்களின் போது கூறப்பட்டவைகளைச் செய்தியாக்கிய ஊடகங்கள் , அதற்க்கு முற்றிலும் மாறாக 3 ஜூலை 2018 ம் தேதிய நீதிமன்ற அதிகாரபூர்வ ஆணையில் லதா ரஜினிகாந்த் அவர்களை பற்றி குறிப்பிட்டு இருப்பதை செய்தி நிறுவனங்கள் முழுமையாக குறிப்பிடவில்லை . இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதுடன் நீதிமன்ற ஆணையின் தமிழாக்கத்தையும் வெளியிட்டுள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in