நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா நட்சத்திர தம்பதியரின் மகள் ஷிவானி ராஜசேகர், ஹிந்தியில் வெளியான 2 ஸ்டேட்ஸ் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் அதே பெயரில் உருவாகி வரும் 2 ஸ்டேட்ஸ் படத்தில் நடித்து வரும் அவர், தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் தற்போது ஒப்பந்தமாகியிருக்கிறார்.
அந்தவகையில், தமிழில் விஷ்ணு விஷால் நடிக்கும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஜல்லிக்கட்டு பின்னணியில் கிராமப்புற கதையில் இந்தபடம் தயாராகிறது.
இதையடுத்து மலையாளத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆக, நடித்த முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே பரவலாக பல மொழிப்படங்களிலும் கமிட்டாகி வருகிறார் ஷிவானி ராஜசேகர்.