Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுகாதார துறையின் எச்சரிக்கைக்கு பணிந்தது சர்கார்

06 ஜூலை, 2018 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Health-department-send-notice-to-Vijay-regarding-Sarkar-Smoking-issue

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சர்கார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், சமீபத்தில் விஜய் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது.

விஜய் புகைப்பிடித்தபடி போஸ்டர் இருந்ததால் விமர்சனங்கள் எழுந்தன. புகைபிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என கூறிய விஜய், இப்போது அதை மீறி துரோகம் செய்துவிட்டார் என பா.ம.க.,வின் அன்புமணி கூறினார். தொடர்ந்து அக்கட்சியின் ராமதாஸ் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை, நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடிவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

மேலும் புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சினிமா துறையினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.

சுகாதாரத்துறையின் நோட்டீஸிற்கு சர்கார் படக்குழு பணிந்துள்ளது. இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விஜய் புகைப்பிடித்த சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது.

Advertisement
போத : பாலியல் தொழிலாளியாகும் இளைஞனின் கதைபோத : பாலியல் தொழிலாளியாகும் ... தமிழ், மலையாளத்தில் அறிமுகமாகும் ஷிவானி ராஜசேகர் தமிழ், மலையாளத்தில் அறிமுகமாகும் ...


வாசகர் கருத்து (20)

sundaram - Kuwait,குவைத்
07 ஜூலை, 2018 - 12:04 Report Abuse
sundaram படம் தயாரிப்பது திமுகவின் ஆஸ்தான தொலைகாட்சி நிறுவனம். அவர்கள் இதே போன்ற போஸ்டர்களை திமுக ஆட்சியின்போது செய்யமாட்டார்கள். மேலும் விஜய் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர் கருத்துக்களை கூறுபவர். ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே இந்த மாதிரியான போஸ்டர்களை போட்டு விளம்பரப்படுத்தி ஆளும் கட்சி தங்களுக்கு தடை போடுகிறது என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.
Rate this:
Srinivasan Desikan - chennai,இந்தியா
07 ஜூலை, 2018 - 10:31 Report Abuse
Srinivasan Desikan சுகாதாரது​றையின் இந்த நடவடிக்​கை வர​வேற்க்கதக்கது. அ​தே​வே​ளையில் தமிழகம் முழுவதும் இயங்கும் அரசாங்க மதுபானக​டை ( டாஸ்மாக் ) அருகில் குடிமகன்கள் குடித்துவிட்டு விழுந்துகிடப்பதும், க​டைஅருகில் இயற்​கை உபா​தைக​ளை கழிப்பதும் நடு​​ரோட்டில் வண்டி​கை நிறுத்தி​வைப்பது ​போன்ற இ​டையூறான ​செயல்களில் ஈடுபடுவதும் ​பொதுசுகாதரத்திற்கு குந்தகம் வி​ளைப்பதும் இந்த அரசாங்கம் தடுக்குமா? எந்த விஷயமாக இருந்தாலும் நடவடிக்​கை என்பது ஒருசார்பாக மட்டு​மே இருக்ககூடாது அப்படிஇருந்தால் அது ஒரு நல்ல அரசாங்கத்திற்கு எடுத்துகாட்டுகி​டையாது .
Rate this:
Srini Vasan - nairobi,கென்யா
07 ஜூலை, 2018 - 10:06 Report Abuse
Srini Vasan புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்தை உங்கள் படத்தின் போஸ்டரில் போடவும். பிரச்சினை முடியும். உங்களால் அப்படி எழுத முடியுமா.
Rate this:
sundar - chennai,இந்தியா
07 ஜூலை, 2018 - 09:57 Report Abuse
sundar வெங்கெங்கெட்ட விஜய் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவராய் இருந்தால் சன் pictures படங்களில் மீண்டும் நடிப்பாரா ? பணத்துக்காக எதுவும் செய்வார்கள் இந்த திடீர் அரசியல் சினமா தலைவர்கள். சில வருடங்களுக்கு முன் இதே தயாரிப்பாளர்களுடன் சிக்கல் ஏற்பட்டு jj காலில் தந்தையுடன் சரண் அடைந்தவர் தானே இந்த விஜய்.
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07 ஜூலை, 2018 - 08:38 Report Abuse
Srinivasan Kannaiya ஒரு சின்ன சநதேகம் ..எல்லா படங்களுமே வெளி இடுவதற்கு முன்பே இப்பிடி ஏதாவது ஒரு விவகாரத்தில் மாட்டிக்கொள்ளுகிறார்கள்... இதுவும் ஒரு முன்னோட்ட விளம்பரமாக இருக்குமோ... காசு இல்லாமல், ஒரு போஸ்டர் இல்லமால்.. தொண்டர்கள் கொடி பிடிக்காமல் இதுவும் ஒரு இலவச விளம்பரம் என்றால் மிகையாகாது...
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in