ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி, கமல், விஜய் தொடங்கி இப்போது உள்ள விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வரை பல நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நடிகர் அஜித் மட்டும் தனது ரசிகர் மன்றததை சில ஆண்டுகளுக்கு முன்னர் கலைத்துவிட்டார். ஆனாலும் அவரின் ரசிகர்களுக்கான மாஸ் மட்டும் குறைந்தபாடில்லை.
கமல் தனது ரசிகர் மன்றத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே நற்பணிமன்றாக மாற்றிவிட்டார். தற்போது அதை அரசியல் அமைப்பாகவும் மாற்றிவிட்டார். ரஜினியும் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, அரசியலில் களமிறங்க உள்ளார்.
பொதுவாக ரசிகர் மன்றங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்றால், சம்பந்தப்பட்ட நடிகர்களின் படங்கள் வரும்போதும், நடிகர்களின் பிறந்தநாளில் மட்டுமே களை கட்டும். அன்றைய தினம், ரத்ததானம், ஏழை மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்குவது போன்ற நலத்திட்டங்களை சில நடிகர்களின் ரசிகர்கள் செய்து வருகின்றனர். இதை அப்படியே தலைமை மன்றத்திற்கு புகைப்படங்களாக அனுப்புவர்.
ரசிகர் மனறத்தினரிடையே அடிதடி தகராறு நிகழ்வுகளும் நடப்பது உண்டு. சமீபத்தில் பேனர் விஷயத்தில் தனுஷ் ரசிகர்களிடையே பிரச்சனை எழுந்தது. எல்லாவற்றையும் கவனித்து வந்த தனுஷ், விரைவில் தலைவர் மற்றும் சில பொறுப்புகளில் ஆட்களை நியமித்து ரசிகர் மன்றத்தை வலுப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இந்த மாத இறுதியில் தனுஷ் பிறந்தநாள் வருகிறது. அதை மிகச்சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். விரைவில் தனுஷ் ரசிகர் மன்றத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார். தனுஷ் தனது ரசிகர் மன்றத்தினருக்கு மாதம் ஒரு தொகையை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.