ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆந்திர அழகியான மது ஷாலினி, தெலுங்கு படங்களின் மூலம் அறிமுகமாகி நடித்துக் கொண்டிருந்தார். பழனியப்பா கல்லூரி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு பாலா இயக்கிய அவன் இவன் படத்தின் மூலம் புகழ்பெற்றார். அவன் இவன் தோல்வியால் மது ஷாலினிக்கு இங்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் நடித்த டிப்பார்ட்மெண்ட் என்ற இந்திப் படம் வெற்றி பெறவே இந்தி நடிகை ஆகிவிட்டார்.
தற்போது வாய்ப்புகள் எதுவும் இன்றி இருக்கும் மதுஷாலினி, டாப்லெஸ் கவர்ச்சி படம் ஒன்றை இன்ஸ்டிராகிராமில் பதிவிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. வாய்ப்புக்காக இப்படி செய்யலாமா என்று நடிகையை விமர்சனம் செய்தார்கள்.
ஆனால் அவரோ, "எனக்கு பிடித்திருந்ததால் பதிவிட்டேன். படத்தை ஆபாச கண்ணோட்டத்தோடு பார்க்காதீர்கள். பரபரப்பு விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்று கூறியிருக்கிறார்.