தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திரைப்படத்துறை தொடர்பான திரைப்படங்கள் நிறைய வெளிவந்திருக்கிறது. நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் தொடங்கி லைட்மேன்கள் வாழ்க்கை வரை சினிமாவாகி இருக்கிறது. இப்போது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எனப்படும் சினிமா துணை நடிகர்களின் வாழ்வியலை மையமாக வைத்து கூத்தன் என்ற படம் தயாராகி வருகிறது. நீல்கிரீஸ் ட்ரீம் என்ற நிறுவனத்தின் சார்பில் முருகன் தயாரிக்கிறார். ஏ.எல்.வெங்கி இயக்குகிறார்.
ராஜ்குமார், ஸ்ரிஜிதா, சோனாஸ், கீரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத், பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா ஸ்ரீரஞ்சனி, ராம்கி, கலா மாஸ்டர் உள்பட பலர் நடிக்கிறார்கள். பலாஜி இசை அமைக்கிறார், மாடசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் வெங்கி கூறியதாவது:
பளபளப்பான சினிமா உலகில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளின் வாழ்க்கை மிகவும் கடுமையானது. வாய்ப்புகள் கிடைப்பது, கிடைத்த வாய்ப்புக்கு கூலி கிடைப்பது என அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். எல்லா ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுமே சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்களாக வேண்டும் என்கிற கனவுகளோடு வந்தவர்கள் தான். அவர்களின் வாழ்வியலை சொல்லும் படம் இது. சினிமா பற்றி நிறைய படங்கள் இதற்கு முன் வந்திருந்தாலும் இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். என்றார்.