தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டியன், நடித்திருக்கும் படம் 'ஜுங்கா'. சுரேஷ் மேனன் வில்லனாக நடிக்கும் இந்தப்படத்தில், சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, ராதாரவி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதியும் அருண்பாண்டியனும் இணைந்து தயாரித்துள்ளனர். ஜூலை மாத இறுதியில் படம் வெளியாகவிருக்கிறது. விஜய்சேதுபதி நடித்த படங்களிலேயே அதிகமான செலவில் படமாக்கப்பட்ட படம் இது.
லண்டனில் உள்ள டான் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிப்பதால் ஜுங்கா படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.
விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளதால் 'ஜுங்கா' படத்தின் ஒவ்வொரு ஏரியாவுக்கு பெரியவிலை சொல்கிறார்களாம்.
இதற்கிடையில் ஜுங்கா படத்தின் சென்னை சிட்டி ஏரியா உரிமையை சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் அங்கமான 'SPI CINEMAS' நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த படத்தின் செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயினின் மிஸ்ரி குரூப் நிறுவனம் வாங்கியுள்ளது.