இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
டி.சிவாவின் 'அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் 'பார்ட்டி'. முழுக்க முழுக்க பிஜித் தீவில் படமாக்கப்பட்ட இந்தப்படத்தில் ஜெய், சிவா, 'கயல்' சந்திரன் கதாநாயர்களாக நடிக்க, நிவேதா பெத்துராஜ், ரெஜினா கெசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்துக்கு, பிரேம்ஜி இசையமைத்துள்ளார். ஏற்கெனவே சில படங்களுக்கு இசை அமைத்துள்ள பிரேம்ஜி, வெங்கட் பிரபு இயக்கும் படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல் முறை.
பார்ட்டி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நேரத்திலேயே இந்தப்படத்தின் நெகட்டிவ் ரைட்ஸை லைகா நிறுவனம் வாங்கிவிட்டதாக தகவல் வெளியானது. 'பார்ட்டி' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவுற்று பர்ஸ்ட்காப்பி தயாராகி பல மாதங்களானநிலையில் பார்ட்டி படத்தை வெளியிட லைகா ஆர்வம் காட்டவில்லை. கோலமாவு கோகிலா உட்பட சில படங்களை வெளியிட்ட பிறகே பார்ட்டி படத்தை வெளியிட இருப்பதாக சொன்னது.
இதனால் அதிருப்தியுற்ற வெங்கட்பிரபு இதுபற்றி தயாரிப்பாளர் டி.சிவாவிடம் முறையிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு லைகாவிடமிருந்து படத்தை திரும்ப வாங்கி தானே வெளியிடுகிறார் டி.சிவா.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் 'ச்சா ச்சா சாரே...' என்று துவங்கும் பாடல் இன்று(ஜூலை 2) மாலை இரவு 7 மணிக்கு வெளியாகிறது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கான புரோமோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.