தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருடன் போலீஸ், உள்குத்து போன்ற படங்களைத் தயாரித்த, 'கெனன்யா பிலிம்ஸ்' தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்வர் சுந்தரம்'.
கேட்டரிங் கல்லூரியில் படித்த அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். பர்ஸ்ட்காப்பி தயாராகி பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்படத்திற்கு ஏற்கெனவே பலதடவை ரிலீஸ் தேதிகள் குறிக்கப்பட்டன.
ஆனால் அந்த தேதிகளில் படம் வெளியாகவில்லை. இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நிறைய கடன்கள் இருப்பதால் பொருளாதார ரீதியில் சிக்கலில் இருக்கிறாராம். இன்னொரு பக்கம் அவருடைய படங்களை வாங்கி வெளியிட்டவகையில் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இம்மாதம் 6-ஆம் தேதி 'சர்வர் சுந்தரம்' வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக விளம்பரங்கள் அமர்க்களப்பட்டது. லேட்டஸ்ட் தகவலின்படி இம்மாதம் 6-ஆம் தேதியும் 'சர்வர் சுந்தரம்' வெளியாகாது என்று அறிவிக்கபட்டுள்ளது.
இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று இயக்குனர் ஆனந்த் பல்கி டுவீட் செய்துள்ளார். சர்வர் சுந்தரம் படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் சந்தானம் கடும் அப்செட்டில் இருக்கிறார்.