ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குழந்தை நட்சத்திரமாகவே 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட மாஸ்டர் மகேந்திரன், ஹீரோவாகவும் ஜெயிக்க போராடிக் கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் புதிய படம்தான் இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன். இதில் திவ்யா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். விஜய் எஸ்.குமரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.சிவா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
மாமன் மகளை திருமணம் செய்ய வற்புறுத்துவதால் திருமணமே வேண்டாம் என்று ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோவுக்கு தாய்மாமன் ஒரு சோதனை வைக்கிறார். அவர் சொல்கிற ஒரு காரியத்தை முடித்து விட்டால் மகளை திருமணம் செய்ய வேண்டாம் என்கிறார். அந்த காரியம் என்ன? அதை அவர் முடித்தாரா. மாமன் மகளிடமிருந்து தப்பித்தாரா என்பதை காமெடியாக சொல்லும் படம். காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் படமாகி வருகிறது. என்றார்.