வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
பிரபல இயக்குனரும், பிரபல தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பத் தேவரின் மருமகனுமான ஆர்.தியாகராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
ரஜினி நடித்த தாய் மீது சத்தியம், தாய்வீடு, அன்புக்கு நான் அடிமை, ரங்கா உள்ளிட்ட 11 ஹிட் படங்களை இயக்கியவர் ஆர்.தியாகராஜன். இது தவிர வெள்ளிக்கிழமை விரதம், தாய் இல்லாமல் நானில்லை, ஆடுக்கார அலமேலு உள்ளிட்ட 28 படங்களை இடங்கி உள்ளார்.
சென்னை போரூரில் வசித்து வந்த இவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.