மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
அதர்வா தயாரித்து நடித்த செம போதை ஆகாதே படம் கடந்த ஜூன் 29-ந்தேதி வெளியானது. இந்த படத்தை அடுத்து இமைக்கா நொடிகள், பூமராங் ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த படங்களில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடித்துள்ள பூமராங் படத்தில் விவசாயி வேடத்தில் நடித்துள்ளார் அதர்வா.
காவிரி, மீத்தேன் உள்ளிட்ட பல பிரச்சினைகளை உள்ளடக்கி உருவாகியுள்ள இந்த படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் நடித்துள்ளார் அதர்வா. அதாவது முதலில் ஐடி பீல்டில் வேலை செய்து வரும் அதர்வா, பின்னர் விவசாயியாக மாறுகிறார். அதையடுத்து, கிளைமாக்ஸில் விவசாயத்துக்கு இடையூறாக இருப்பவர்களை அழிக்கும் ஒரு அதிரடி கெட்டப்புக்கு மாறுகிறாராம்.
இந்த வேடத்தில் அவரது கெட்டப்பை முழுமையாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஒரு மேக்கப்மேனை அழைத்து வந்து அவரது கெட்டப்பை மாற்றியிருக்கிறார் டைரக்டர் ஆர்.கண்ணன். ஆக, பூமராங் படத்தில் முதன் முறையாக மூன்று விதமான கெட்டப்பில் நடித்துள்ளார் அதர்வா.