ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆர்யா, சந்தோஷ் சிவன் பங்குதாரர்களாக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'தீவண்டி'.. மலையாள சினிமாவின் இளம் நடிகரும், தமிழில் மாரி-2வில் வில்லனாக நடிப்பவருமான டொவினோ தாமஸ் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தை பெலினி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
இந்தப்படம் நேற்று (ஜூன்-29) ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ரிலீசுக்கு முதல்நாள் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை வேறொரு நாளைக்கு தள்ளிவைத்து விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்தப்படம் நேற்று வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நாயகன் டொவினோ தாமஸுக்கு மற்றவர்கள் சொல்லித்தான் இந்த தகவலே தெரியவந்ததாம்.
இதனால் அதிர்ச்சியும், அப்செட்டும் ஆன டொவினோ தாமஸ், "என்னிடம் முன்கூட்டியே ஒரு தகவல் சொல்லி இருந்திருக்கலாம். இருந்தாலும் தயாரிப்பாளர்கள் கொடுத்த இந்த திடீர் சர்ப்ரைஸுக்கு நன்றி" என தனது வருத்தத்தை கிண்டலுடன் வெளிப்படுத்தியுள்ளார்.