ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்றதுடன் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிய படம் 'டேக் ஆப்'. குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில், பார்வதி ஆகியோர் நடித்த இந்தப்படத்திற்கு பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. விஸ்வரூபம் படத்தொகுப்பாளராக பணியாற்றிய மகேஷ் நாராயணன் இயக்கியிருந்தார்.
இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்த படத்தின் கதையை தயார் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த மகேஷ் நாராயணன், துல்கர் சல்மானை இயக்க உள்ளாராம். இந்தப்படம் 2019 முதல் மாதத்தில் துவங்க உள்ளதாம்.