இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடித்த இப்படத்தில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முதன்மை ரோலில் நடித்திருந்தனர்.
ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆளப்போறான் தமிழன் பாடல் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தேனாண்டாள் பிலிம்ஸ் 100வது படமாக இந்தப்படத்தை தயாரித்தது.
இப்படம் பற்றிய தகவல் வெளியான ஒவ்வொரு சமயமும் டுவிட்டரில் அதிகளவில் அந்த விஷயம் டிரென்ட்டாகின. முதன்முறையாக மெர்சலுக்கு எமோஜி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், டுவிட்டரில் மெர்சல் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. டுவிட்டரில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்காக மெர்சல் இடம்பெற்றுள்ளது.
சென்னையில் நடந்த வணக்கம் டுவிட்டர் நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான டுவிட்டர் அமைப்பின் தலைவர் தரன்ஜித் சிங் இதனை தெரிவித்துள்ளார்.