‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் சிவாஜியின் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஷால் கூறியிருப்பதாவது.... திரைத்துறையின் அடையாளங்களில் முக்கியமானவர், தமிழ் சினிமாவின் தலைசிறந்த மூத்த கலைஞர், கலைத்துறைக்கு பெருமை சேர்த்த கலைமாமணி நடிகர் திலகம் சிவாஜிகணேசன். காலத்தால் அவரது புகழ் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்காக முயற்சி எடுத்த முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது... தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞரும், கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று கலைத்துறைக்கு பெருமையை ஈட்டித் தந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தநாளான அக்.1 ம் தேதியை இனி ஒவ்வொறு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.
இந்திய அளவிலும், உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படும் சிவாஜியின் கலைச் சேவையை பாராட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் சார்பாகவும், ஒட்டுமொத்த தமிழ் திரைத்துறையினர் சார்பாகவும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.