இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவின் நடிப்பு திலகமாக வாழ்ந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். பல படங்களில் கடவுள்களையும், சுதந்திர போராட்ட வீரர்களையும் கண்முன் நிறுத்தியவர். இவரைப் போன்று இனி ஒருவர் நடிக்க முடியுமா என பெயர் எடுத்தவர். சிவாஜி, கடந்த 2001-ம் ஆண்டு, 73-வது வயதில் இறந்தார்.
தமிழக அரசு சார்பில் அவருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டு, கடந்தாண்டு அக்., 1-ம் தேதி அவரின் பிறந்தநாளில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் சிவாஜியின் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி சட்டசபையில் இன்று(ஜூன் 29) அறிவித்தார். விதி எண் 110-ன் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.