'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
படங்களில் ரொமான்டிக் நாயகியாக நடித்தபோதும் அவ்வப்போது வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வகையில், அறம் படத்தில் மாவட்ட கலெக்டராக நடித்து கைதட்டல் பெற்றார்.
அதையடுத்து இப்போது இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கிறார். தொடர் கொலைகள் செய்து வரும் ஒரு சைக்கோவை கண்டுபிடிக்கும் அதிரடியான வேடத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இந்த படத்திற்காக தனது தலைமுடியை பாதி அளவு கத்தரித்து ஹேர் ஸ்டைலை மாற்றி நடித்துள்ள நயன்தாரா, ஐந்து வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் நயன்தாராவின் கணவர் வேடத்தில் விஜய் சேதுபதி நட்புக்காக நடித்துள்ளார். அவர்களுக்கு ஒரு பாடல் காட்சியும் உள்ளது.