தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியான படம் திரிஷா இல்லன்னா நயன்தாரா. இந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். அதன்பிறகு சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார்.
இந்நிலையில, நேற்று சென்னையில் நடந்த இமைக்கா நொடிகள் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கிய திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை தயாரித்த அதே கேமியோ பிலிம்ஸ் சி.ஜே.ஜெயக் குமார் தான் இந்த இமைக்கா நொடிகள் படத்தை தயாரித்துள்ளார்.
இந்த விழாவில் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது, நான் திரிஷா இல்லன்னா நயன்தாரா கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். ஆனால் யாரும் அந்த கதையை தயாரிக்க முன்வரவில்லை. கடைசியாக ஜெயக்குமாருக்கு போன் செய்தேன்.
ஆனால் அந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பு அவரது குடும்பத்தினருக்கு படத்தை போட்டு காண்பித்திருக்கிறார். படத்தைப் பார்த்த அவர்கள், இப்படியொரு படத்தை ஏன் தயாரித்தீர்கள் என்று அவரை பயங்கரமாக திட்டியிருக்கிறார்கள்.