பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தில் நடித்து முடித்ததும், ஞானவேல்ராஜா தயாரிப்பில், ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குநரான ஆர்.ரவிகுமார் இயக்கும் சயின்ஸ் பிக்ஷ்ன் படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இவருக்கு ஒன்றரை கோடி சம்பளம். காரணம் இந்தப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களும் தெலுங்கில் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கில் மார்க்கெட் வேல்யூவை கொண்டு வருவதற்காகவே முதன் முதலாக இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.
இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த படமும் இரு மொழிகளில் உருவானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காமெடிக்கு கருணாகரன் யோகி பாபு இருவருடன், 'கலக்கப்போவது யாரு' கோதண்டமும் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது இதுவே முதல்முறை.